சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!
Sep 14, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

Murugesan M by Murugesan M
Jul 30, 2025, 06:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போர் விமானங்களிலிருந்து ஏவக்கூடிய புதிய ஹைப்பர் சோனிக் வகை ஏவுகணையை பரிசோதித்து உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது சீனா. குறிப்பாக அமெரிக்காவின் 5ம் தலைமுறை போர் விமானங்கள், பி-21 பாம்பர் விமானங்களைத் தாக்கக் கூடிய திறன் பெற்ற இந்த ஏவுகணை இந்தியாவுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச நாடுகள் தங்களது ஹைப்பர்சோனிக் ஆயுதங்களின் வேகம், தாக்கத்தை அதிகரிக்கப் போட்டிப்போட்டு வருகின்றன. அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், ஜெட் விமானங்களை உருவாக்கும் முயற்சியிலும் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், சீனா ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கிய அழிக்கக் கூடிய  hypersonic air-to-air missile ஒன்றைப் பரிசோதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒலியின் வேகத்தைக் காட்டிலும் 5 மடங்கு வேகமாகச் செல்லும் இந்த ஏவுகணை, எதிரி விமானங்களுக்கு ரேடார் சிக்னல் கிடைக்கும் முன்பே தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை….

மேலும் இந்த ஏவுகணை 5ம் தலைமுறை போர் விமானங்கள், வேவு பார்க்கப் பயன்படுத்தப்படும் உளவு விமானங்களையும் தாக்கி அழிக்கும் திறன் பெற்றவை என்று கூறப்படுகிறது. “Beyond Visual Range” வகையைச் சேர்ந்த சீனாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணை, விமானி இலக்கை பார்க்காமலேயே ரோடார் அல்லது பிற சென்சார் மூலம் இலக்கை தாக்கும் திறன் கொண்டது என்பதால், எதிர்கால போர் தந்திரங்களின் மிக முக்கியத்துவம் பெறும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக அமெரிக்காவின் F22,F35 ரக அதிநவீன விமானங்கள், ஈரானில் அணு ஆயுத தளங்கள் மீது குண்டுவீசிய அமெரிக்காவின் B-21 Raider விமானங்களை எளிதாக அழிக்கும் வல்லமை கொண்டவையாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் AIM-174B, ரஷ்யாவின் R-37M ஏவுகணைகள் 400 கிலோ மீட்டர் தூர இலக்கை தாக்கும் திறனுடன் உள்ள நிலையில், சீனாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், தைவான் போன்ற நாடுகள் தங்களது பாதுகாப்பு தந்திரங்களை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

இந்தியா தற்போது Astra Mk-1, Mk-2, Mk-3 ஏவுகணைகளை அதிநவீனப்படுத்தி வரும் நிலையில், நவீன போர்யுகத்தில் சீனாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணை கடும் சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வகை ஏவுகணை, எதிரி விமானங்களை கூடுதல் பாதுகாப்புடன் இருந்தாலும், மிகவும் தூரத்தில் இருந்தே அழிக்கும் திறன் கொண்டவை இருப்பதால், இதன் தாக்கம் எதிர்கால விமானப் போர்களை  தீர்மானிக்கும் சக்தியாக இருக்கக்கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். எனினும் சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதா? என்பது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Trouble with Chinese hypersonic missile: Even America's B-21 Raider can't escapeஅமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது
Share
Tweet
SendShare
Previous Post

AI மூலம் ‘திவ்ய த்ரிஷ்டி’ சோதனை : சீன எல்லைக்கு அருகே இந்திய ராணுவம் அசத்தல்!

Next Post

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளோம் – மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!

Related News

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies