நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!
Aug 31, 2025, 06:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம் : மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Aug 13, 2025, 09:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாய் கடியில் நம்பர் 1 தமிழகம்  என்றும் மக்களை காக்க உடனடி நடவடிக்கை தேவை என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 3.67 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். நடப்பாண்டில் 20 பேர் நாய்க்கடியால் உயிரிழந்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பதோடு ஆளும் திமுக அரசின் நிர்வாக லட்சணத்தையும் நமக்கு தோலுரித்துக் காட்டுகின்றன என தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே நாய்க்கடியில் தமிழகத்தை முதலிடத்தில் தூக்கி நிறுத்தியது தான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனையா? என்றும் அவர் வினவியுள்ளார்.

திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கால் ஏற்கனவே உயிர்பயத்தில் வாழும் தமிழக மக்கள். கட்டுக்கடங்காமல் பெருகி வரும் தெருநாய்களின் தொல்லையால் தற்போது பொதுவெளியில் நடமாடுவதற்கே அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தெருவில் திரியும் வெறிநாய்களைக் கட்டுப்படுத்தும் திராணியற்ற ஆளும் அரசு, நல்ல ரக நாய்களை நாங்களே விற்கிறோம் எனக் கிளம்பியுள்ளது வேடிக்கையானது.
தமிழக மக்களின் உண்மையான பிரச்சினைகள் என்னென்ன? அவர்களின் தேவை என்ன? ஒரு அரசின் கடமை என்ன? என்பது குறித்த சிந்தனை கூட இல்லாத திமுக அரசு. தங்களுக்குப் பிடித்த பொழுது போக்குகளைத் திட்டங்களாகத் தீட்டி, அதற்கு மக்கள் வரிப்பணத்தை விரயமாக்கி ஒரு சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதை இனியும் அனுமதிக்க முடியாது. பொறுப்புகளைத் தட்டிக் கழித்துவிட்டு ஃபோட்டோஷூட்டிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் முதல்வரை மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தெருநாய்களின் எண்ணிக்கையும் ரேபிஸ் பாதிப்புகளும் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட “தமிழ்நாடு மாநில நாய் இனப்பெருக்கக் கொள்கை” என்னவானது?

ஒவ்வொரு ஆண்டும் விலங்குகள் நலனுக்காக ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான நிதி எங்கே போனது? அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ரேபிஸ் தடுப்பூசி கிடைக்கிறதா? நாய்க்கடிக்கு முறையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றனவா? தங்கள் மாநிலத்தின் தெருநாய்களைக் கொண்டு வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விட்டுச் சென்ற கேரள அரசை இதுவரைக் கண்டிக்காதது ஏன்? போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆட்சி முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தெருநாய்களின் இனப்பெருக்கத்தையும், ரேபிஸ் நோய் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் திமுக அரசு துரிதப்படுத்த வேண்டும். இல்லையேல் தமிழக மக்களின் உயிரோடு விளையாடும் திமுக அரசைக் கண்டித்து பல போராட்டங்களைத் தமிழக பாஜக முன்னெடுக்கும் என்றும் நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார்.

Tags: Tamil Nadu is number 1 in dog bitesDMK government ibjpbjp proteststalinTamil Nadu BJP state president Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

Next Post

சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இந்தியா நம்புகிறது – பிரதமர் மோடி

Related News

மோடியின் ராஜதந்திரம் : இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்!

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமாம் : திருந்தாத பாகிஸ்தான் – முன்கூட்டி எச்சரித்ததை மறக்கலாமா? இந்தியா காட்டம்!

டிரம்ப் வரிவிதிப்பு சட்டவிரோதமானது : அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவுக்கு பலன் தருமா?

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

நீதிமன்றத் தீர்ப்பு அமெரிக்காவிற்கே பேரழிவு : டிரம்பின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

ஜப்பானுக்காக சீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் பணக்கார பிச்சைக்காரர் : மொத்த சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய்!

அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் – இபிஎஸ் கேள்வி!

அரசுத் துறைகளில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

2 தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைய உள்ளது : பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆர்.கே சிங்

மதுரைக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதியவர் மீது தாக்குதல்!

முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் – வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies