தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்றும், முதலமைச்சர் ஸ்டாலினின் இரும்புக்கரம் தற்போது துருப்பிடித்து விட்டதாகவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை என்றார்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் தமிழகத்தில் 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றும், “2026ல் ஆட்சி மாற்றம் வந்ததும் மதுரை, கோவை மாவட்டங்களில் நிச்சயம் மெட்ரோ ரயில் வரும் என்றும் தெரிவித்தார்.
எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பின், கொளத்தூர் தொகுதியில் மட்டுமல்ல, எந்த தொகுதியிலும், ஸ்டாலின் ஜெயிக்க முடியாது. காங்கிரஸ் விஜயுடன் கூட்டணி பேசுகிறது என்றும் வி.சி.க.,வும் சென்றுவிடும் என்றும் அவர் கூறினார்.
அ.தி.மு.க.,வின் கூட்டணிதான் பலமாக உள்ளதாகவும் நயினார் தெரிவித்தார்.
















