விளம்பர ஃபோட்டோஷூட்களில் பிஸியாகிவிட்டார் ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன்
May 6, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விளம்பர ஃபோட்டோஷூட்களில் பிஸியாகிவிட்டார் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Dec 27, 2025, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பள்ளிச் சுவர்களை இடியவிட்டு “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” எனப் போலி பிம்பச் சுவரை  திமுக அரசு எழுப்புகிறது என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியின் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்து 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த துயரத்தில் இருந்தே தமிழகம் இன்னும் மீண்டு வராத நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 100 அரசுப் பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள் முற்றிலுமாக சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி விளம்பர விழா நடத்த நிதியிருக்கும் திமுக
அரசுக்குப் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மனமில்லை என்பதற்கான மற்றொரு சான்று இது. எளிய பின்புலம் கொண்ட பிள்ளைகளின் புகலிடமாகத் திகழும் அரசுப் பள்ளிகளை எதற்கு இத்தனை அலட்சியத்துடன் ஆளும் அரசு கையாள்கிறது என்று புரியவில்லை.

அரசுப் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லாததால் பிள்ளைகள் ஊற்று தோண்டி தண்ணீர் குடிப்பதையும், கழிவறை இல்லாததால் இயற்கை உபாதை கழிக்க பிள்ளைகள் திறந்தவெளிகளை நாடுவதையும், சத்துணவில் புழு, பூச்சி, பல்லிகள் மிதப்பதையும், புதிய கட்டடங்களின் மேற்கூரை பெயர்ந்து விழுவதையும் கண்டு நமக்கு தான் நெஞ்சம் பதறுகிறதே தவிர, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பவர்கள் அமைதியாக வேடிக்கை தான் பார்க்கிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

“அரசுப்பள்ளிகள் எனது கோட்டை” என்று பஞ்ச் வசனம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  அமைதியாகப் பதுங்கிவிட்டார், “நான் உங்கள் அப்பா” என சென்டிமென்ட் வசனம் பேசிய முதல்வர் ஸ்டாலின் விளம்பர ஃபோட்டோஷூட்களில் பிஸியாகிவிட்டார்.

இவர்களை நம்பி வாக்களித்த மக்கள் தங்கள் குடும்பத்துடன் நிற்கதியற்று நிற்கிறார்கள். அதுசரி, மக்கள் நலனைப் பேணுவதற்கா திமுக ஆட்சிக்கு வந்தது? என்று எழுப்பியவர்  கொள்ளையடிப்பவர்களிடம் கொத்து சாவியைக் கொடுத்தது தமிழகத்தின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: bjpDMKStalin has become busy with promotional photoshoots - Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

மணல் கொள்ளை தொடர்பாக நிபுணர்களின் உதவியை பெற அதிகாரம் உள்ளது – உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில்!

Next Post

TET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குக – அண்ணாமலை

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies