ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசு வன்முறையைக் கையாண்டால், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் உச்ச தலைவரைக் கொல்லவும் தயங்கமாட்டார் என்று அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எச்சரித்துள்ளார்.
நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பேசிய கிரஹாம், தன் சொந்த மக்களையே கொன்று உலகை அச்சுறுத்தும் அயதுல்லா ஒரு மதவாத நாஜி ஆவாரெனக் கூறியுள்ளார்.
உதவி வந்து கொண்டிருக்கிறது, உங்கள் நாட்டை அயதுல்லாவிடமிருந்து மீட்டெடுங்கள் என்றும் ஈரான் மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும், சிறந்த வாழ்க்கைக்காகப் போராடும் உங்கள் சொந்த மக்களையே நீங்கள் தொடர்ந்து கொலை செய்து கொண்டிருந்தால், டொனால்ட் டிரம்ப் உங்களைக் கொன்றுவிடுவார் எனவும் எச்சரித்தார்.
அமெரிக்கா, வெனிசுலாவிற்குள் புகுந்து அதன் அதிபர் மதுரோவைக் கைது செய்ததைச் சுட்டிக்காட்டிய கிரஹாம், டிரம்ப் வெறும் எச்சரிக்கையோடு நின்றுவிட மாட்டார் என்பதை ஈரான் உணர வேண்டும் என்றார்.
















