கோவையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தலைமையில், பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஒவ்வொரு கட்சியும், தங்கள் கூட்டணியை வலுப்படுத்த போராடி வருகிறது.
அந்த வகையில், கோவை வந்துள்ள பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தலைமையில் அக்கட்சியின் மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், மூத்த தலைவர்கள் தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மேலும் பலம் சேர்ப்பது குறித்தும், வருகின்ற தேர்தலில் அளிக்கப்பட வேண்டிய வாக்குறுதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அதிமுகவிடம் அதிக இடங்களை பெறுவது குறித்து ஆலோசனை நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
















