தமிழர்களின் மாண்பைக் காக்க, இண்டி கூட்டணியினரை எதிர்த்து முதல்வர் குரல் கொடுக்கப் போகிறாரா அல்லது மௌனம் சாதிக்கப் போகிறாரா? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் மாநிலத் தலைவருமான சகோதரர் அண்ணாமைலை குறித்து மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கொச்சையாக விமர்சனம் செய்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, மலினமான வார்த்தைகளைப் பிரயோகித்து, ஒட்டுமொத்தத் தமிழர்களையும் இழிவுபடுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
வட மாநிலத்தவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசி அறிவாலய தலைவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இனவெறித்தீ, இன்று அவர்களது இண்டி கூட்டணியினராலேயே தமிழர்களை நோக்கித் திரும்பியுள்ளதாக தெரிவத்துள்ளார். .
“தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்” என்று போலியாக சூளுரைக்கும் முதல்வர் தற்போது தமிழர்களின் மாண்பைக் காக்க, இண்டி கூட்டணியினரை எதிர்த்துக் குரல் கொடுக்கப் போகிறாரா அல்லது மௌனம் சாதிக்கப் போகிறாரா? என்றும் நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.
















