பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான நட்பு உண்மையானது என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்புக்கு மிக நெருக்கமான அதிகாரியாக அறியப்படும் சொ்ஜியோ கோா் வெள்ளை மாளிகையில் அதிபரின் தனி இயக்குநராக பணியாற்றி வந்தாா்.
இவர் கடந்த ஆண்டு நவம்பா் மாதத்தில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பதவியேற்றாா். பதவியேற்ற ஒரு சில நாள்களில் அமெரிக்கா திரும்பிய அவா், இந்தியாவுக்கு சனிக்கிழமை மீண்டும் வந்தாா்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய செர்ஜியோ கோர், பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான நட்பு உண்மையானது எனவும், நண்பர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு வருவது சகஜம் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய செர்ஜியோ கோர், இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு இந்தியாவை விட அத்தியாவசியமான கூட்டாளி வேறு யாரும் இல்லை என கூறியுள்ள செர்ஜியோ, இது உலகின் பழமையான ஜனநாயகத்திற்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கும் இடையிலான ஒரு சங்கமம் எனவும் தெரிவித்துள்ளார்
















