இந்தியாவின் பொருளாதார பலத்தையும், அமெரிக்காவிற்கான அதன் பங்களிப்பையும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பனர் ரிச் மெக்கார்மிக் பேசியுள்ளார்.
அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிச் மெக்கார்மிக், வாஷிங்டனில் இந்தியா – அமெரிக்கா உறவு குறித்து பேசினார்.
அப்போது பாகிஸ்தானை ஒரு “கண்ணாடி” போலச் சித்தரித்த மெக்கார்மிக், அந்நாடு அமெரிக்காவிற்கு எந்தவிதமான முதலீடுகளையும் கொண்டு வரவில்லை என்று விமர்சித்தார்.
அதே சமயம் இந்தியா, அமெரிக்காவிற்குள் முதலீடுகளைக் கொண்டு வருவதோடு, இங்கிருந்து முதலீடுகளைப் பெற்றுப் பொருளாதாரத்தை வளர்ப்பதாகவும் கூறினார்.
இந்தியாவின் திறமையானவர்கள் அமெரிக்க நிறுவனங்களின் வெற்றிக்குத் தூணாக இருப்பதாகவும் அவர் பாராட்டினார்.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா வெறுக்கிறது என்று குறிப்பிட்ட மெக்கார்மிக், பிரதமர் மோடி தனது நாட்டின் நலனுக்காகவும், மலிவான எரிசக்தி மூலம் பொருளாதாரத்தை வளர்க்கவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார்
















