வாக்குறுதியை நிறைவேற்ற கோருபவர்கள் மீது கைது நடவடிக்கை - தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!
May 6, 2026, 05:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்குறுதியை நிறைவேற்ற கோருபவர்கள் மீது கைது நடவடிக்கை – தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 19, 2026, 03:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்குறுதியை நிறைவேற்றக் கோருபவர்கள் மீது திமுக அரசு கைது நடவடிக்கை மேற்கொள்வதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் பள்ளிகளில், மதிய உணவுத் திட்டத்தில் பணியாற்றும் சுமார் 65,000க்கும் அதிகமான ஊழியர்களுக்கு, பணிப் பாதுகாப்பும், முறையான ஓய்வூதியமும் வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்தும், அதற்கான நடவடிக்கை எடுக்காததால், நாளை முதல் வேலை நிறுத்தம் செய்வதாக, மதிய உணவுத் திட்ட ஊழியர்கள் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால், பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று, திமுக கொடுத்த பல நூறு போலி வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. இதனால் பாதிக்கப்பட்டுள்ளது, மாணவர்களின் பசி தீர்க்கும் சத்துணவு ஊழியர்களே என அவர் கூறியுள்ளார்.

பொய்யான வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றிவிட்டு, வாக்குறுதியை நிறைவேற்றக் கோரும் மக்களின் மீது, கைது நடவடிக்கை என அடக்குமுறையைக் கையாண்டு கொண்டிருக்கிறது திமுக அரசு என்றும் அண்ணாமலை சாடியுள்ளார்.

ஆனால், கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல், மீண்டும் மேடை போட்டு, மக்களை ஏமாற்றக் கிளம்பிவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது கூட, திமுகவினருக்கு உரைக்கவில்லையா? என்றும் அவர் வினவியுள்ளார்.

நீங்கள் கொடுத்த வாக்குறுதியைத்தானே அவர்கள் நிறைவேற்றக் கேட்கிறார்கள். முறையான பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கூட உங்களுக்கு நேரமில்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு, நாளொரு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளர்.

Tags: annamalaiDMKannamalai bjpannamalai speechMK StalinAnnamalai Press Meetbjp annamalai latestsadunavu employee protestbjp annamalai
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் அருகே பெண் காவலர் கழிவறையில் வீடியோ எடுத்த விவகாரம் – சிறப்பு எஸ்ஐ கைது!

Next Post

சமயநல்லூர் அருகே டயர் வெடித்ததால் அரசுப்பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து : 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies