கிரீன்லாந்தை கையகப்படுத்தும் விவகாரத்தில் அமெரிக்காவின் நெருக்கடி அதிகரித்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் கண்கலங்கி நிற்கின்றன… டிரம்ப்பின் வரிவிதிப்பு அஸ்திரத்தை அப்போதே புரிந்துகொண்ட இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கை உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக அச்சுறுத்தல்கள் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தங்களுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளன..இதன் காரணமாக அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தயாராகி வருகின்றன..
அதே நேரத்தில் இந்தியா தனது தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, ஒப்பந்தங்களில் அவசரப்படுவதை தவிர்த்ததன் மூலம், தனது விருப்பங்களையும், பேச்சுவார்த்தை வலிமையையும் பாதுகாத்திருக்கிறது….
கிரீன்லாந்தை சொந்தம் கொண்டாடும் அமெரிக்காவின் நடவடிக்கை, அட்லாண்டிக் கடல் கடந்த பதற்றங்களுக்கு மத்தியில், டிரம்பின் வர்த்தக உறுதிமொழிகளில் உள்ள அடிப்படையான பலவீனத்தை அம்பலப்படுத்தியுள்ளது…
கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் உடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டபோதும், தனது கிரீன்லாந்து முழக்கத்தை எதிர்க்கும் நாடுகளுக்கு வரிவிதிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருகிறார் டிரம்ப்…
இது அமெரிக்கா உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்யும் நடவடிக்கைக்கு ஐரோப்பிய நாடுகளை தள்ளியுள்ளது…
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றிய தயாராகி வருவதாக பைனான்சியல் டைம்ஸ் கூறுகிறது..
அதன்படி வர்த்தக ரீதியில 93 பில்லியன் யூரோ மதிப்பிலான பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்ள ஐரோப்பிய நாடுகள் ஆலோசித்து வருகின்றன. அதில், வரிவிதிப்பு நடவடிக்கைகளும், அமெரிக்க நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றிய சந்தையை அணுகுவதற்கான சாத்தியமான கட்டுப்பாடுகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ராஜதந்திர முயற்சிகளை தீவிரப்படுத்தவும், எதிர்நடவடிக்கைகளை தயாரிக்கவும் ஐரோப்பிய நாடுகள் முனைப்பு காட்டி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது…
தனிப்பட்ட மற்றும் புவிசார் அரசியல் நோக்கங்களை அடைய டிரம்ப் வரி விதிப்பை ஆயுதமாக பயன்படுத்தி வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் இனி மேற்கொள்ளும் வர்த்தக ஒப்பந்தங்கள் எதிர்கால வரிகளில் இருந்து நெருங்கிய கூட்டாளிகளைக் கூட தனிமைப்படுத்தாது என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறது…
கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், முழுமையான வர்த்தக போருக்கு எதிரான ஒரு தடுப்புச்சுவராக கருதப்பட்டது…
அதன்பபடி அமெரிக்க தொழில்துறை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாய பொருட்கள் மீதான வரிகளை ஐரோப்பா ரத்து செய்வதற்கு ஈடாக, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருட்களுக்கு 15 சதவிகித வரி விதிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது…
அந்த நேரத்தில்கூட ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்குள் இருந்த உறுப்பினர்கள், அமெரிக்காவுடனான ஒப்பந்தம் ஒருதலைபட்சமானது என்றும், வாஷிங்டனுக்கு அதிக செல்வாக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் எச்சரித்தனர்…
அப்போதைய எச்சரிக்கைகள், அமெரிக்காவின் பிடிவாத குணத்தால் தற்போது உறுதியாகியுள்ளன…
இந்த நிலையில்,அமெரிககாவுடனான ஒப்பந்தம் சாத்தியமில்லை என்றும், அமெரிக்க தயாரிப்புகள் மீது வரிகளை குறைப்பதற்கான ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன…
வர்த்தக திருத்தத்திற்குப் பதிலாக வற்புறுத்தலின் கருவியாக வரிகள் பயன்படுத்தப்படும்போது, எந்த ஒப்பந்தங்களுக்கும் பயனளிக்காது என்பதை அமெரிக்காவின் நடவடிக்கையால் ஐரோப்பிய நாடுகள் உணர்ந்துள்ளன….
இந்தப் பின்னணியில், அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின நீண்டகால மற்றும் எச்சரிக்கையான அணுகுமுறை உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது…
ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரிட்டனை போலின்றி, அமெரிக்கா 50 சதவிகித வரியை விதித்தபோதும், தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு உட்பட்டபோதும், இந்தியா ஒப்பந்தங்களில் அவசரம் காட்டவில்லை…
ஐரோப்பா இப்போது நேரடியாக எதிர்கொள்வதை இந்தியா முன்கூட்டியே உணர்ந்ததாகவும் உலக நாடுகள் நம்புகின்றன… அச்சுறுத்தல், காலக்கெடு என்ற அடிப்படையில் போடப்படும் எந்த ஒப்பந்தமும் நீண்டகால பாதுகாப்பை வழங்காது..
வரி அச்சுறுத்தல் மூலம் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான போரை தடுத்ததாக டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறியது. பொருளாதார தாக்கத்திற்கு பதிலாக, புவிசார் அரசியலுக்கு வர்த்தக நடவடிக்கைகள் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றன என்ற இந்தியாவின் கவலைகளை ஆழப்படுத்தியது..
இந்தியாவின் நிலைப்பாடு மோதலாக அல்ல, கட்டுக்கோப்பாக இருந்தது. கடுமையான வரிகள் மற்றும் பொது அழுத்தம் இருந்தபோதிலும், முக்கிய தேசிய நலன்களில் சமரசம் செய்ய இந்தியா மறுத்துவிட்டது.
இந்தியா பற்றிய டிரம்பின் பேச்சையும், அவரது அமைச்சர்களின் கடுமையான சொல்லாட்சிக் கூச்சலையும் இந்தியா தவிர்த்தது. வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் அமைதியாக இருந்தாலும், உயிர்ப்புடன் இருந்ததோடு, இராஜதந்திர வழிகள் திறந்தே இருந்தன…
அதேநேரத்தில் அமெரிக்கா – ஐரோப்பிய நாடுகள் இடையே தற்போது நிலவும் சூழல், பழிவாங்கும் திறனை அதிகரித்திருப்பதோடு, இருதரப்பு பேச்சுவார்த்தைக்கும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.
அடுத்தகட்ட நகர்வுகள், அமெரிக்கா- ஐரோப்பிய நாடுகள் இடையேயான உறவை எவ்வாறு பாதிக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்……
















