வரும் சட்டமன்ற தேர்தல் கடினமானதாக இருக்கும் எனவும், காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டுமெனவும் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் எப்பொழுதுமே தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் நேற்று நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆனையம் விசில் சின்னம் ஒதுக்கியிருப்பது குறித்து பேசி காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜை அனுப்பியுள்ளார். அதில் “விஜய் கட்சிக்கு விசில் சின்னம் வழங்கியுள்ளனர். என்னை பொருத்தமட்டில் அது நல்ல சின்னம் என்றும் இந்த தேர்தல் நீங்கள் நினைப்பதைபோல் எளிதாக இருக்காது கடினமாகவே இருக்கும் என்றும் உங்களது பகுதியில் உள்ள மக்கள் எந்த கூட்டனி குறித்து அதிகம் பேசுகிறார்கள் என கண்காணித்து எனக்கு தகவல் அளியுங்கள் என்றும் அவ்வப்போது எனக்கு வாய்ஸ் மெசேஜ் மூலம் கள நிலவரம் குறித்து தகவல் அளியுங்கள் என கூறி வாய்ஸ் மெசேஜை அனுப்பியுள்ளார்.
















