இடைநிலை ஆசிரியர் கோரிக்கையை அலட்சியப்படுத்தும் திமுக - அண்ணாமைலை
Jan 31, 2026, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இடைநிலை ஆசிரியர் கோரிக்கையை அலட்சியப்படுத்தும் திமுக – அண்ணாமைலை

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 31, 2026, 11:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, ஐந்து ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தும், அதனைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி திமுக அரசு வந்ததாக தெரிவித்துள்ளார்.

வேறு வழியின்றி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகின்றனர். அவர்களை இப்படி சாலைக்கு வர வைத்தது திமுக அரசின் திட்டமிட்ட அலட்சிய மனப்பான்மை மட்டுமே என்றும் அவர் கூறினார்.

தற்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஜனவரி மாத ஊதியத்தை வழங்காமல், மேலும் அவர்களுக்கு அநீதி இழைத்திருக்கிறது திமுக அரசு. முதலமைச்சர் ஸ்டாலின் அரசின் நிர்வாகத் தவறுகளுக்காக, ஆசிரியப் பெருமக்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில், குற்றவாளிகள் எந்த பயமுமின்றி கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை திமுக அரசு அச்சுறுத்தி கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை, ஊழல் திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக, ஆசிரியர்களுக்கு, ஜனவரி மாத ஊதியத்தை முழுமையாக வழங்குவதோடு, சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: Secondary school teachers protestAnnamalai condemenedqual pay for equal work.annamalaiDMK governmentChief Minister StalinDMK's election promise
ShareTweetSendShare
Previous Post

மதுபோதையில் பள்ளி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்!

Next Post

அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Related News

ட்ரம்ப்பின் துருப்புச் சீட்டா? மெலனியா ஆவணப் படம் – வரவேற்பளிக்காத மக்கள்!

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு சவால் விடும் இந்தியாவின் 5-ம் தலைமுறை ஹெலிகாப்டர்கள்!

சீனாவுடன் பிரிட்டன் வர்த்தக உறவு ஆபத்தானது – வயிற்றெரிச்சலை கொட்டியுள்ள டிரம்ப்!

இது ஆப்கனை தாக்க சரியான நேரம் அல்ல – பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்

EU ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், துருக்கி, வங்கதேசத்திற்கு நெருக்கடி! – திணறடித்த இந்தியா

தமிழக பாஜக சமூக ஊடகப்பிரிவு நிர்வாகி பிரவீன் ராஜ் கைது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆன்மிகத்தில் கொங்கு மண்டலம்  சிறப்பான வளர்ச்சி பெற்று வருகிறது – விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

குமாரபாளையம் தனியார் கல்லூரியில் தரமற்ற உணவு – மாணவர்கள் விடிய விடிய போராட்டம்!

சென்னையில் போலீசார் துன்புறுத்தியதாக கூறி இளம்பெண் தற்கொலை முயற்சி – ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

திடீரென முடங்கிய விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு – எங்கே? என அனுஷ்கா சர்மாவிடம் கேட்ட ரசிகர்கள்

இந்து கோயில்களை அழித்த கஜினி முகமதுவை காங்கிரஸ் தொடர்ந்து புகழ்ந்து வருகிறது – பாஜக பதிலடி!

மேகாலயாவில் வாழும் வேர் பாலங்களை யுனெஸ்கோ அங்கீகரிக்க இந்தியா பரிந்துரை!

அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இடைநிலை ஆசிரியர் கோரிக்கையை அலட்சியப்படுத்தும் திமுக – அண்ணாமைலை

மதுபோதையில் பள்ளி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்!

புதுச்சேரியில் தேர்தல் அறிக்கை தொடர்பான கருத்துக்கேட்பு பணி – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies