ராமநாதபுரத்தில் தேர்தலை கருத்தில் கொண்டு திமுக சார்பில் பரிசு பொருட்கள் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேர்தலை கருத்தில் கொண்டு வாக்காளர்களை கவர்வதற்காக திமுகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரிசு பொருட்களை விநியோகிப்பதாக புகார் எழுந்துள்ளது. அந்த வகையில் ராமநாதபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பரிசு என்ற பெயரில் குடும்ப அட்டை அடிப்படையில் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் பொருட்களில் ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















