தமிழக மக்களுக்கும் சக இந்தியர்களைப் போலவே கூட்டணி அரசாங்கம் அமைவதில் எந்த பிரச்சனையும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் தரவுகள் சரிபார்ப்பு பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் எல்லாம் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள விரும்பும்போது,
தமிழ்நாட்டின் சில போலியான தனித்துவத்திற்கு பின்னால் ஏன் இன்னமும் ஒளிந்து கொண்டிருக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
















