மத்திய அரசில் அங்கம் வகித்த போது தமிழ்நாட்டிற்காக திமுக கொண்டு வந்த திட்டங்கள் என்ன? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், மத்திய அமைச்சர் பதவி கிடைத்த போது அதிலும் ஊழல் செய்தவர்கள் திமுகவினர் என தெரிவித்தார். இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு தான் என்றார்.
சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட அதிமுகவை மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள் என்றும், தமிழகத்தில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் இபிஎஸ் கூறினார்.
















