தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து சுமார் ஆயிரம் பேர் அதிமுகவில் இணைந்தனர்.
சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழச்சி நடைபெற்றது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் முகமது அப்பாஸ் தலைமையில் திமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த ஆயிரம் பேர், திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அலெக்ஸாண்டர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இதனை தொடர்ந்து, ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பகுதி கழக செயலாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
















