இந்தியாவில் கடன் பெறுவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை எம்ஜிஆர் நகரில் என்டிஏ கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் 75 நாட்களில் 246 கொலைகள் நடந்துள்ளதாகவும், மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்றும் கூறினார்.
வகுப்பறையிலேயே மாணவிகள் மது அருந்துவதாகவும், போதைப்பொருள் புழக்கத்தைக் தமிழக அரசு கட்டுப்படுத்தத் தவறி விட்டதாகவும் சாடினார்.
தேர்தல் அறிக்கை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் இபிஎஸ் கூறினார்.
















