நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு வருகை வந்த மத்திய இணை அமைச்சரும், உதகை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான எல்.முருகனுக்கு பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.
பின்னர் எல்.முருகன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தேர்தல் கள நிலவரம் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்த அவர், என்.டி.ஏ சார்பில் நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட பாஜக தலைவர் தருமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
















