முந்தைய காங்கிரஸ் அரசு செய்த பாவத்தை தற்போதைய மத்திய அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 2004 முதல் 2010 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டதாக கூறினார்.
எதிர்கால சந்ததியினரை கடனில் ஆழ்த்துவதாக அப்போதைய பிரமதர் மன்மோகன் சிங் கூறியதாகவும், எண்ணெய் பத்திரங்களை வெளியிடுவது தவறு என தெரிந்தும் அதனை செய்ததாகவும் சாடினார்.
2020ம் ஆண்டுக்கு பிறகு இந்த பத்திரங்களுக்கு பணம் திருப்ப செலுத்தப்பட்ட கூறிய அவர், ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வட்டியையும் சேர்த்தால் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை நாடு செலுத்த வேண்டியதாகி விட்டதாக கவலை தெரிவித்தார்.
உலகம் முழுவதும் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையிலும், இந்தியா தனது வளர்ச்சி பாதையில் முன்னேறி வருவதாகக் கூறிய அவர், பிப்ரவரி 28 ல் போர் துவங்கியதில் இருந்து 23 நாட்களைத் திரும்பிப் பார்த்தால், நாட்டின் கிழக்கு முதல் மேற்கு வரையிலும், வடக்கு முதல் தெற்கு வரையிலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
உலகைச் சுற்றி நிலவும் குழப்பம் மற்றும் மோசமான சூழலிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருவதாக கூறிய பிரதமர் மோடி, பல நாடுகள் இந்தியாவின் கொள்கை, திட்டங்கள் மற்றும் பலத்தை பார்த்து ஆச்சர்யப்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
















