FIFA 2026 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் : காலிறுதியில் கலக்கப்போகும் அணி எது? - சிறப்பு தொகுப்பு!
Oct 7, 2026, 11:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

FIFA 2026 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் : காலிறுதியில் கலக்கப்போகும் அணி எது? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 6, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 2022 உலகக் கோப்பையில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அணி மொராக்கோ. ஆப்பிரிக்க கால்பந்தின் முகவரியையே மாற்றிய அந்த அணி, மீண்டும் வரலாறு படைக்கும் கனவோடு களமிறங்கியுள்ளது. ஆனால் இந்த முறை எதிரில் இருப்பது, உலக சாம்பியனான பிரான்ஸ். யார் அரையிறுதிக்குள் நுழைவார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த மோதல் குறித்து விரிவாக பார்க்கலாம்…

மொராக்கோ… உலக கால்பந்து போட்டியில் இந்தப் பெயரைக் கேட்டாலே அதன் போராட்டமும் சாதனையும் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். கடந்த உலகக் கோப்பையில், முதல் ஆப்பிரிக்க நாடாக அரையிறுதிக்குள் நுழைந்து சரித்திரம் படைத்தது மொராக்கோ. அந்த சாதனை வெறும் அதிர்ஷ்டம் அல்ல என்பதை மீண்டும் நிரூபிக்க இந்த உலகக் கோப்பையிலும் அதே உத்வேகத்துடன் களமிறங்கியுள்ளது.

இந்த முறையும் மொராக்கோவின் பயணம் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. நெதர்லாந்து போன்ற பலம் வாய்ந்த அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அந்நாடு, அடுத்ததாக கனடாவை 3க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. தாக்குதலிலும், தற்காப்பிலும், ஒற்றுமையிலும், தங்களது தரத்தை உயர்த்திக் கொண்டே செல்கிறது மொராக்கோ அணி.

இப்போது மொராக்கோவின் முன் நிற்பது உலக சாம்பியனான பிரான்ஸ்.

பிரான்ஸ் என்றாலே உலகத் தரம் வாய்ந்த வீரர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். அதன்படி, கிலியன் எம்பாப்பே தலைமையில் வேகமான தாக்குதல், அனுபவம் வாய்ந்த மிட்ஃபீல்டு, உறுதியான பாதுகாப்பு என சமநிலை கொண்ட அணியாக அந்த அணி இந்தமுறை களமிறங்கியுள்ளது. நாக் அவுட் சுற்றில் பாரகுவேவை 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் முன்னேறிய பிரான்ஸ், மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் இலக்குடன் பயணிக்கிறது. இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

2022 உலகக் கோப்பை அரையிறுதியில் இதே பிரான்ஸிடம் 2க்கு 0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது மொராக்கோ. அந்த தோல்வியானது உலகக் கோப்பை இறுதிப்போட்டி கனவை முடிவுக்குக் கொண்டு வந்தாலும், உலக ரசிகர்களின் மனதில் மொராக்கோவுக்கு ஒரு தனி இடத்தை உருவாக்கியது.

இப்போது அதே பிரான்ஸை மீண்டும் எதிர்கொள்கிறது மொராக்கோ. இது வெறும் காலிறுதி அல்ல. நான்கு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தோல்விக்கான பதிலடி கொடுப்பதற்கான நல்ல வாய்ப்பும்கூட.

மொராக்கோவின் பலமே அதன் ஒற்றுமை தான். ஒரே ஒரு நட்சத்திர வீரரை நம்பாமல், ஒட்டுமொத்த அணியும் ஒன்றாக போராடும் குணம்தான் அவர்களின் மிகப்பெரிய பலம். கோல் கீப்பர் யாசின் புனோவின் அசத்தலான சேவ்கள், அஷ்ரப் ஹகீமியின் வேகமான ஓட்டம், ஊனாஹியின் மிட்ஃபீல்டு கன்ட்ரோல், ரஹிமியின் கோல் அடிக்கும் திறன் என அசுர பலத்துடன் நிற்கிறது, மொராக்கோ. .

மறுபுறம் உலகின் மிகவும் ஆபத்தான தாக்குதல் வீரர்களில் ஒருவராக திகழும் எம்பாப்பே தலைமையில் களமிறங்கியுள்ளது பிரான்ஸ்.
ஒரு சிறிய தவறைக்கூட பெரிய கோலாக மாற்றும் திறன் எம்பாப்பே-வுக்கு இருக்கிறது. அதோடு, அனுபவம் நிறைந்த வீரர்கள் பலரும் பிரான்ஸ் அணியில் இருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

புள்ளிவிவரங்கள், உலக தரவரிசை, அனுபவம் என அனைத்தும் பிரான்ஸின் பக்கம் இருக்கலாம். ஆனால் உலகக் கோப்பை வரலாறு திரும்ப திரும்ப சொல்வது ஒன்றைதான். அது, மன உறுதியும், ஒற்றுமையும் இருந்தால் எந்த அணியையும் அசைத்து பார்க்கலாம்.

அதனால்தான் இந்தப் போட்டி வெறும் பிரான்ஸ் – மொராக்கோ இடையேயான மோதலாக மட்டும் பார்க்கப்படவில்லை. மாறாக,
ஒரு பக்கம் உலக சாம்பியனின் ஆதிக்கம், மறுபக்கம் மீண்டும் வரலாறு எழுதத் துடிக்கும் ஒரு நாட்டின் கனவு. இவற்றிற்கிடையேயான போராக இந்த போட்டி கருதப்படுகிறது.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் மொராக்கோ சாதித்து உலகை ஆச்சரியப்படுத்துமா? அல்லது அனுபவம் வாய்ந்த உலக சாம்பியனான பிரான்ஸ் மீண்டும் தனது வலிமையை நிரூபிக்குமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லப்போகும் 90 நிமிட ஆட்டத்தையே கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags: fifa world cup 2026 songfifa world cup 2026 livefifa world cup 2026 matchesfifa world cup 2026 previewsfifa world cup 2026 stadiumsfifa world cup finalquarter finalsFranceNorwayfootball world cup 2026fifa world cup 2026
Share
Tweet
SendShare
Previous Post

மேகதாது அணை விவகாரம் – நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்துடன் அன்புமணி சந்திப்பு!

Next Post

இந்தோனேசியாவில் பிரதமர் மோடி; நேரில் வரவேற்ற அதிபர்

Related News

ரஷ்யாவில் 70,0000 இந்தியர்களுக்கு பணிவாய்ப்பு : ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு வியூகம் – சிறப்பு தொகுப்பு!

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு – மேலும் இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

நல்லாட்சி வழங்கியிருந்தால் நீண்ட பரப்புரையில் முதல்வர் ஈடுபட வேண்டிய அவசியமில்லை – கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 மாதங்களில் 1,129 கோடி உண்டியல் காணிக்கை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை ஆதரவு கப்பலான சூர்யா – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

ஓட்டப்பிடாரம் அருகே மின்பாதை அமைக்க எதிர்ப்பு – மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்!

மதுரையில் பாஜக பேரணிக்கு அனுமதி மறுப்பு – சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு!

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – விநாயகர் கோயிலில் பிரதமர் பிரதமர் மோடி வழிபாடு!

ராகுல்காந்தி நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் – கிரண் ரிஜிஜூ

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies