அரசுப் பள்ளிகளில் பரவும் ஆயுத கலாச்சாரம் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Jul 15, 2026, 09:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசுப் பள்ளிகளில் பரவும் ஆயுத கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 15, 2026, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசுப் பள்ளிகளில்  ஆயுதக் கலாச்சாரம் பரவி வருவதாகவும், ஆனால் ஆளும் தவெக அரசு அலட்சியப்படுத்துகிறதா என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், சிவகங்கை அருகே நிரஞ்சான் என்ற கிராமத்தில், ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை வகுப்பறையிலேயே சக மாணவன் கத்தியால் குத்தியதாகவும், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள அரசன்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 9-ம் வகுப்பு மாணவனை, சக மாணவன் மண்வெட்டியால் தாக்கியதாகவும் வெளியாகியுள்ள செய்திகள்  பதறச் செய்வதாக தெரிவித்துள்ளார்.

அறநெறிகளை போதிக்க வேண்டிய பள்ளிகளில், ஆயுதங்கள் புழங்குவது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமன்றி, ஆரோக்கியமான சமூகத்திற்கும் அழகல்ல. குறிப்பாக, அரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே இதுபோன்ற மோதல்கள் தொடர்வது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனின் நிர்வாகத் தோல்விக்கான சான்றாகத் தான்  எடுத்துக் கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

எனவே, கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் தனியார் பள்ளிகளை “comfortable” ஆக வைத்துக் கொள்வதற்காக மட்டும் பல நடவடிக்கைகளை எடுத்து வரும்  ராஜ்மோகன்  விளிம்புநிலை மக்களின் வரப்பிரசாதமாக விளங்கும் அரசுப் பள்ளிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

அரசுப் பள்ளிகளில் “Conflict management”, “Adaptability” உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்! மேலும், மாணவர்களுக்கு இடையேயான கோப, தாபங்களை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கும் பிரத்யேக பயிற்சி அளிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: TVK governmentMinister Rajmohannainar nagendran press meetVijaytamil nadu schoolsgovernment schoolstamilnadu bjp state president
ShareTweetSendShare
Previous Post

தென் சீன கடலுக்கு உரிமை கொண்டாடும் சீனா : ஜப்பான் தூதரை நேரில் அழைத்து விளாசல் சிறப்பு தொகுப்பு!

Next Post

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் அளிப்பது எப்படி? – தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

Related News

சூரிய ஒளியில் ஜொலிக்கும் சிறிய நகரங்கள் : இந்தியாவின் புதிய சோலார் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் : உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3வது நாளாக போராட்டம்!

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் அளிப்பது எப்படி? – தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

தென் சீன கடலுக்கு உரிமை கொண்டாடும் சீனா : ஜப்பான் தூதரை நேரில் அழைத்து விளாசல் சிறப்பு தொகுப்பு!

யுத்த களமான ஹார்முஸ் ஜலசந்தி : பலியாகும் இந்திய மாலுமிகள் : காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயிலுக்கு சொந்தமான ரூ 100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது – விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசுப் பள்ளிகளில் பரவும் ஆயுத கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை – காவல்துறைக்கு கடிதம் எழுதிய செந்தில் பாலாஜி!

இன்றைய தங்கம் விலை!

காமராஜரின் சேவையுணர்வும் சுயநலமற்ற தலைமைத்துவமும் வருங்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

பொதுவாழ்வில் சிறந்த ஆளுமையாக திகழ்ந்தவர் காமராஜர் – பிரதமர் மோடி புகழாரம்!

அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்த முதலமைச்சர் விஜய்தான் களவாணி – இபிஎஸ் விமர்சனம்!

உலகக்கோப்பை கால்பந்து தொடர் – இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஸ்பெயின்!

2031ஆம் ஆண்டுக்குள் 20,000 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் – தமிழக அரசு முடிவு!

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

நாடு முழுவதும் ரூ.81,000 கோடி சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies