தவெக தலைவர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் உள்ள அம்மா திடலில் வரும் 23ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதன் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, திமுக ஆட்சி அகற்றப்படுவதே தங்கள் நோக்கம் எனவும், விஜய்க்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.
பழைய பராசக்தி படம் வெளியானபோது சென்சார் போர்டில் காங்கிரஸ் கட்சியினர் புகாரளித்ததாகவும், அவர்களை போல தாங்கள் ஒருபோதும் செய்யமாட்டோம் எனவும் கூறினார்.
















