அமெரிக்க கடற்படையின் தலைமை தளபதியாக அட்மிரல் லிசா பிரான்செட்டியை நேற்று (21.07.2023) ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதன் மூலம் கடற்படையை வழிநடத்தும் அட்மிரல் பதவியை பெரும் முதல் பெண் என்ற வரலாற்றுப் பெருமையைப் லிசா பிரான்செட்டி பெறுகிறார்.
அமெரிக்காவின் தற்போதைய கடற்படைத் தளபதியாக அட்மிரல் மைக் கில்டே உள்ளார். இந்நிலையில் கில்டேயின் நான்கு ஆண்டு பதவிக்காலம் முடிவடையும் நிலையில் அடுத்த இடத்தில் உள்ள லிசா பிரான்செட்டியை கடற்படையின் அடுத்த தலைமைத் தளபதியாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
லிசா பிரான்செட்டி கடற்படையில் வழிகாட்டும் ஏவுகணை, போர்க்கப்பல்கள் இயக்குதல் ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றியுள்ளார் என்றும் ஆழ்ந்த நிபுணத்துவம் கொண்ட இவர் சீனாவால் அதிகரித்து வரும் பிரச்னையைச் சமாளிப்பதில் திறன்பெற்றவர் ஆவார்.