டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஜி20 அமைப்பின் எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
பசுமை வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றத்திற்கு இந்தியா மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. அதிக உலகளவில் மக்கள் தொகை கொண்ட நாடாகவும், அதிவேகமாக வளரும், பெரிய பொருளாதார நாடாகவும் இந்தியா உள்ளது. சோலார் மற்றும் காற்றாலை சக்தியில் உலகளவில் தலைமை வகிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் 19 கோடி குடும்பங்களுக்கு எரி வாயு இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து கிராமங்களையும் மின்சாரம் இணைப்பு வழங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளோம்.
அனைவரையும் உள்ளடக்கிய, சமமான மற்றும் நிலையான வளர்ச்சிக்கு பணியாற்றுவதே எங்களது இலக்கு. 2015 ல் சிறிய அளவில் எல்இடி விளக்குகளை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தோம். இது தற்போது உலகளவில் எல்இடி விநியோகிக்கும் மிகப்பெரிய திட்டமாக மாறி உள்ளது.
பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் திட்டத்தை இந்த ஆண்டு தொடங்கி உள்ளோம். இதனை நாடு முழுவதும் 2025ம் ஆண்டிற்குள் விரிவுபடுத்தப்படும். தொழில்நுட்ப இடைவெளிகளை சரி செய்யவும், எரிசக்தி பாதுகாப்பை ஊக்கப்படுத்தவும் நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.