மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் அறிக்கையை வெளியிடக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டதால் ராஜ்யசபா பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங் அமர்வு முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், மணிப்பூர் விவகாரம் காரணமாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இன்றும் மக்களவை, மாநிலங்களவை முடங்கியுள்ளது. மேலும் மதியம் 2 மணி வரை இன்று இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவில் கடும் அமலில் ஈடுபட்ட ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங்கை இந்த அமர்வு முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் ஜெகதீப் தங்கர் தெரிவித்தார்.