வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன், 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்கள் முன்னிலை பெற்று அணியை டிக்ளேர் செய்தது.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் இரு அணிகளும் தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன.
இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 438 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆட்டத்தில் களமிறங்கிய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா, 44 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால், 30 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். கில், 37 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். நான்காவது பேட்ஸ்மேனாக விளையாடிய இஷான் கிஷன், 34 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் நேற்று நடைபெற்ற (23.072023) போட்டியில் இஷான் கிஷன் – 33 பந்துகளில் அரைசதம் அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பின்னுக்குத் தள்ளினார். இதற்கு முன்னதாக 2022-ஆம் ஆண்டு ரிஷப் பந்த் – 28 பந்துகளில் இலங்கையைப் பின்னுக்கு தள்ளியதும், 2006 -ஆம் ஆண்டு தோனி – 34 பந்துகளில் பாகிஸ்தானைப் பின்னுக்கு தள்ளியதும் குறிப்பிடத்தக்கது.