தென்காசியில் திமுக மகளிர் அணி சார்பில் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக கட்சியினருக்குள் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு திமுக மகளிர் அணி சார்பில் மணிப்பூர் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேடையில் வைத்து மாவட்ட செயலாளர் சிவபத்மநாபனின் தூண்டுதலின் பேரில் தன்னைப்பற்றி தவறாகவும் ஆபாசமாகவும், அசிங்கமாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களை தட்டிகேட்க துப்பில்லாத மாவட்ட செயலாளருக்கு மணிப்பூர் சம்பவம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவி தமிழ்செல்வி ஆவேசமாக பேசினார். இதனை அடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.