ரஷ்யாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற்றம் தொடர்பாக, பாலினம் மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவிற்கு அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த புதிய சட்டம் மூலம் பாலினத்தை மாற்றுவது போன்ற மேற்கத்திய சிந்தனைகள் ரஷ்ய பாரம்பரியத்திற்கு எதிராக உள்ளதாக கருதி அதற்குத் தடை விதித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக ஒப்புதல் பெறப்பட்டது. அந்நாட்டில் பாலின மாற்றம் மற்றும் மூன்றாம்பாலினத் திருமணம் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய சட்டத்தின்படி, “ஒரு நபரின் பாலினத்தை மாற்றுவதை நோக்கமாக கொண்ட எந்தவொரு மருத்துவ சிகிச்சையும்” ரஷ்யாவில் தடை செய்யப்படும் என ரஷ்யா அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் திருமண அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதுடன், மூன்றாம் பாலினத்தவர்களின் குழந்தைகளைத் தத்தெடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.