இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை(03.08.2023) முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன.
இந்த ஆட்டத்தில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும் எனவும் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என தெரியவந்துள்ளது.
இந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியானது 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் என்பதால் சர்வதேச ஹாக்கி போட்டிக்காக எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் நவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டிக்கான இறுதிக் கட்ட ஆயத்தப் பணிகளைப் போட்டி அமைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
போட்டியில் பங்கேற்கும் அணிகள் தங்களை தயார்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த போட்டியில் பங்கேற்க முதல் அணியாக மலேசியா அணி சென்னை வந்தது. இதைத்தொடர்ந்து தென்கொரியா, ஜப்பான் அணிகளும் சென்னை வந்தடைந்தன.
The competition heats up 🔥
Pakistan Men's Hockey Team has arrived for the Hero Asian Champions Trophy Chennai 2023.#HockeyIndia #IndiaKaGame #HACT2023 pic.twitter.com/HsueWxg0fr
— Hockey India (@TheHockeyIndia) August 1, 2023
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் விமானம் மூலம் பாகிஸ்தான் அணியும் சென்னை வந்தடைந்தது. அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஹாக்கி இந்தியா சார்பில் உற்சாமான வரவேற்பு அளிக்கப்பட்டது.