சட்ட விரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மேற்கொண்ட சோதனையில், 22 லட்சம் ரூபாய் ரொக்கம், கணக்கில் காட்டாத 16.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் நிலங்கள் தொடர்பான ஐயத்துக்குரிய 60 ஆவணங்களைப் பறிமுதல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்திருக்கிறது.
கடந்த 3ஆம் தேதி முதல் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அவரது தம்பி வீடு மற்றும் இருவருக்கும் தொடர்புடையவர்களின் கரூர் மற்றும் கோவை வீடுகள், அலுவலகத்தில் நடத்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான விவரங்களை அமலாக்கத்துறை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரொக்கமாக 22 லட்சம் ரூபாயும், 16.6 லட்சம் மதிப்பிலான பொருட்களும், 60 இடங்களில் நிலம் வாங்கியதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்க்கொணர்வு மனு மீதான வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.