செஸ் உலகக்கோப்பை தொடரில் உலகின் மூன்றாவது இடம் பிடித்த வீரர் ஹிகாரு நகமுராவையும், இரண்டாவது இடம் பிடித்த வீரர் ஃபேபியானோ கருவானாவையும் வீழ்த்தி தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாதனை படைத்துள்ளார்.
அசர்பைஜானில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் கொடி தமிழக வீரர் பிரக்ஞானந்தாவால் உயர பறந்துள்ளது.
இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு தமிழரான பிரக்ஞானந்தா செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதுமட்டுமின்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இளம் வீரர்களில் பிரக்ஞானந்தா மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்தியாவில் 4 வீரர்கள் மட்டுமே இந்த போட்டிக்கு தகுதிப்பெற்ற நிலையில் பிரக்ஞானந்தா மட்டுமே அரையிறுதிக்குள் நுழைந்தார். 4 டைபிரேக்கர் சுற்றின் முடிவில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். அரையிறுதிப் போட்டியில் போராடி வெற்றிப் பெற்று,பிரக்ஞானந்தா இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவாரா ? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. .