தி.மு.க அரசின் தவறான நடவடிக்கை மற்றும் ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மிகப் பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற தலைப்பில், தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு தொகுதி வாரியாக முதற்கட்ட யாத்திரை மேற்கொண்டார். இந்த நடைபயணத்திற்கு பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. 22 நாட்கள் நடைபெற்ற இந்த முதற்கட்ட யாத்திரை தற்போது நிறைவு பெற்றுள்ளது.
இந்த நிலையில், தி.மு.க அரசுக்கு எதிராக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மிகப் பெரிய அளவிலான போராட்டத்திற்கு திட்டமிட்டு வருவதாகத் தெரிய வருகிறது.
இதற்காக, வரும் 31-ம் தேதி சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.