பாரதப் பிரதமர் மோடி கொடுத்த முழு உத்வேகம் காரணமாக, சந்திரயான்-3 திட்டம் மிக்கபெரிய வெற்றி பெற்றது. நிலவின் தென்துருவத்தில், விண்கலத்தை இறங்கி இஸ்ரோ உலக சாதனை படைத்தது. இந்த வெற்றியை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலத்தில் உள்ள பொதுமக்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் உலகத் தலைவர்கள், இந்திய அரசியல் பிரபலங்கள், விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், திரைப்படப் பிரபலங்கள், என அனைத்து தரப்பினரும் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கிய அதே நேரத்தில், ஓடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தை மற்றும் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. இதனால், இந்தக் குழந்தைகளின் பெற்றோர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதில், பிறந்த ஒரு குழந்தைக்கு சந்திரயான் எனப் பெற்றோர்கள் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். இந்தச் செய்தியை மருத்துவமனை முழுவதும் பரவியது. பூமியில் பிறந்த சந்திரயானை மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த, கேந்திரபாரா மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் பிரகராஜ், நிலவில் சந்திரயான் தரையிறங்கியதை குறிக்கும் வகையில், பிறந்த குழந்தைக்கு சந்திரயான் என பெயர் வைக்கப்பட்டது. இது தேசப்பற்றுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தியர்கள் அனைவரும் நாட்டின் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள் என்பதற்கு இதுவே மிகச்சிறந்த உதாரணம் என நெகிழ்ச்சி தெரிவித்தார்.
பூமியில் பிறந்த சந்திரயான் மற்ற குழந்தைகளைவிட மிகவும் அழகாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.