பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகும் .
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். நடக்கும் ஆவணி மாதப் பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பதால் பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு இரயில்களை இயக்க தென்னக இரயில்வே உத்தரவிட்டுள்ளது.
தெற்கு ரயில்வே சார்பில், ஆகஸ்ட் 30-ந் தேதி மாலை 6 மணிக்குச் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்குச் சிறப்பு இரயில் இயக்கப் படுகிறது.
ஆகஸ்ட் 31-ந் தேதி திருவண்ணாமலையிலிருந்து மதியம் 3.45 மணிக்குச் சென்னைக்குச் சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது. மேலும், திருவண்ணாமலை – விழுப்புரம் வரையிலான முன்பதிவற்ற சிறப்பு இரயில் தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31-ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3.30 மணிக்குப் புறப்படும் இந்த இரயில், விழுப்புரம் வழியாகத் தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல சிறப்பு இரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.