சமீபத்தில், அஜர்பைஜானில் நடந்து முடிந்த பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு நடத்தும் 2023 செஸ் உலகக்கோப்பை போட்டியின் பெண்கள் பிரிவில் இந்தியாவில் இருந்து ஏழு பெண் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதுதான் இந்தியாவில் இருந்து சென்ற பெண்களின் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும்.
இதற்கு முன்பு 2021யில் நடைபெற்ற பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு நடத்தும் செஸ் போட்டியில் 4 பெண்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். தற்போதைய இந்த ஏழு பேரில் 2 பெண்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு நடத்தும் செஸ் போட்டியில் இந்தியாவின் முதல் இடத்தில் உள்ள வீராங்கனை கோனேரு ஹம்பை இவர் உலக ரேங்கிங்யில் 374வது இடத்தில் உள்ளார்.மேலும் இவர் கிராண்ட் மாஸ்டர் விருது பெற்றுள்ளார். இவரை போன்றே FIDE செஸ் போட்டியில் இதுவரை 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால் ஒரு ஆண்டில் 7 பெண்கள் போட்டியில் பங்குபெற்றது இதுவே முதல் முறை ஆகும்.