ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 3888 மீட்டர் உயரம் உள்ள தெற்கு இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் புனித குகை கோவிலுக்கு வருடாந்திர யாத்திரை ஜூன் 1 ஆம் தேதி தொங்கி 62 நாட்கள் நாட்கள் கழித்து இன்றுடன் நிறைவடைகிறது.
பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் கந்தர்பால் பால்டால் மற்றும் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் ஆகிய இரண்டு வழித்தடங்களைப் பயன்படுத்தி அமர்நாத் புனிதக் குகைக்குப் பயணம் மேற்கொள்கிறார்கள்.
இதற்கிடையில், இன்று ஷ்ரவண பூர்ணிமாவை முன்னிட்டு அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹாரா பகுதியில் உள்ள தேஜ்வாரி குக்கிராமத்தில் புராதன சோட்டா அமராந்த் ஜி குகைக்கு ஏராளமான யாத்ரீகர்கள், குறிப்பாக காஷ்மீர் பண்டிட்டுகள் அதிகாலையில் இருந்து சிவனை தரிசித்து வருகின்றனர்.
ரக்ஷா பந்தன் பண்டிகையுடன் இணைந்த ஷ்ரவண பூர்ணிமாவின் நல்ல நாளில்,மகந்த் தீபேந்திர கிரி தலைமையிலான புனித மஸ் சாரி முபாரக் இன்று அதிகாலை அமர்நாத் குகையை அடைந்தார், இதன் மூலம் இந்த ஆண்டு 62 நாட்கள் நீடித்த யாத்திரையின் நிறைவை இது குறிக்கிறது.
அமர்நாத் வளிமண்டலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய க்வாஞ்ச் குண்டுகள் சத்தத்திற்கு மத்தியில், சிவபெருமான் தனது சக்தி தேவியான பார்வதிக்கு அமர்கதை கூறிய புனித குகையில் பாரம்பரிய சடங்குகள் மற்றும் சாரி முபாரக்கின் பூஜையில் அர்ச்சனை செய்யப்பட்டது.
இந்த ஆண்டு அமர்நாத் வருடாந்திர யாத்திரையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுமார் 4.5 லட்சம் பக்தர்கள் புனிதக் குகையில் இயற்கையாக உருவாகிய பனி சிவலிங்கத்தை தரிசனம் செய்தனர். யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் தரிசனத்தை அமைதியான முறையில் நடத்த யூனியன் பிரதேசம் தேவையான ஏற்பாடுகளை செய்தது.
இதில் உள்ளூர் முஸ்லீம் மக்களும் யாத்திரைக்கு ஒத்துழைப்பு கொடுத்து உதவி செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.