"மக்களுக்காக, மக்களால் என்ற ஜனநாயக கோட்பாட்டை பிறழாமல் பின்பற்றும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி"!
Jun 16, 2025, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

“மக்களுக்காக, மக்களால் என்ற ஜனநாயக கோட்பாட்டை பிறழாமல் பின்பற்றும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி”!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் அனைத்து மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் இன்று (31-08-23) நடைபெற்றது.

Web Desk by Web Desk
Aug 31, 2023, 07:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உள்ள பா.ஜ.க அலுவலமான கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் அனைத்து மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் இன்று (31-08-23) நடைபெற்றது. இதில் பா.ஜ.க மூத்த நிா்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மூன்று தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1
”சந்திரனில் பாரதம் தடம் பதித்ததற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாராட்டு”
“சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்ற பாரதியின் நூற்றாண்டு கனவு இன்று மேடை தோறும் அவரை முழங்கும் பிரதமர் நரேந்திர மோடியால் நனவாகியுள்ளது. “சந்திரன் ஒளியில் அவளை கண்டேன்” என்ற பாரதியின் வரிகளுக்கு ஒப்ப “சிவசக்தி” என்று பெயரிட்டது போற்றுதலுக்கும், பெருமைக்கும் உரியது. தோல்வி கண்டு துவளாமல், வெற்றியை எப்படிச் சாதிப்பது என்பதற்கு சந்திராயன்-3 மிகச் சிறந்த உதாரணம். பாரில் பாரதத்தின் பெருமையை நிலைநாட்டி, இந்திய அறிவினை எடுத்துக்காட்டி, ஒவ்வொரு இந்தியனையும் பெருமைகொள்ள செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் , அவர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்து சாதனை படைக்க செய்த, பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் கோடானகோடி நன்றிகளும், பாராட்டுக்களும்.

தீர்மானம் – 2
சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்ததற்கு பாரத பிரதமர் அவர்களுக்கு நன்றி
தேசத்துப் பெண்களை தெய்வமென மதிக்கும் குணக்குன்று, நமது பாரதப் பிரதமர் அவர்கள். அவர்களின் அல்லல் நீக்கி, பெறாத பிள்ளையாய் துணை நிற்பவர் பிரதமர் அவர்கள். விழாக்காலங்களில் விலை மலிவு என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் என்பதை நன்கு அறிந்தவர். 2021ல், தீபாவளிக்கு பெட்ரோல் விலை குறைத்தார். இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்தது இல்லத்தரசிகளுக்கு மிகப் பெரிய பரிசாகும். தேர்தலை முன்னிட்டு இல்லாமல், தேவையறிந்து , குடும்ப உறுப்பினரை போல, தேசத்து குடும்பங்களுக்கு இன்பத்தை வாரி வழங்கும் பாரத பிரதமர் அவர்களுக்கு அனைத்து தாய்மார்கள் சார்பிலும் நன்றி

தீர்மானம் – 3
மாநிலத் தலைவர் அவர்களின் இரண்டாம் கட்ட யாத்திரைக்கு வாழ்த்துக்கள்

“மக்களுக்காக”, “மக்களால்” என்ற ஜனநாயக கோட்பாட்டை பிறழாமல் பின்பற்றும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான். திராவிட மாயையிலிருந்து தமிழகத்தை மீட்டு, அதன் புராதானத்தை, கலாச்சார தொன்மையினை மீட்டு. “செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே” என்ற பாரதியின் வரிகளை நனவாக்கும் முயற்சியில், பிரதமர் அவர்களோடு தோள் கொடுத்து உழைக்கும் நமது மாநில தலைவர், மதிப்பிற்குரிய அண்ணாமலை ஜி அவர்களின் “என் மண், என் மக்கள்” யாத்திரையின் முதற்கட்டம், எதிர்பார்த்ததை விட தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்பது கண்கூடாக தெரிகிறது. எதிர்கால தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக, ஒளிவு மறைவற்ற தலைவராக, உள்ளதை உள்ளபடி உரைக்கும் உன்னதராக இளைஞர்களும், மக்களும் தலைவர் அவர்களை பார்க்கிறார்கள்.
2ஆம் கட்ட யாத்திரையானது வருகின்ற செப்டம்பர் 4ந் தேதி தொடங்க உள்ளது. முதற்கட்டத்தை விட இது இன்னும் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை. “பசி நோக்கார், கண் துஞ்சார்” என்ற தமிழ் கூற்றினர் போல, அயராது பாடுபடும் தலைவரின் முதற்கட்ட யாத்திரையின் நிறைவுக்கு பாராட்டுக்கள். இரண்டாம் கட்ட யாத்திரைக்கு வாழ்த்துக்கள் .

Tags: TamilNadu Bjpbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

அமர்நாத் யாத்திரை இன்றுடன் நிறைவு !

Next Post

மாதம் 1,000 புதிய உறுப்பினர்கள் – புதிய பாதையில் பாஜக!

Related News

நீலகிரி மாவட்டத்தில் கனமழை : பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

திற்பரப்பு அருவியில் 3-வது நாளாக கரைபுரண்டு ஓடும் வெள்ளம் – கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி!

சாத்தூர் : அரசுப் பள்ளியில் பயின்று மும்பை ஐஐடியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் தேர்வில், தேர்ச்சி பெற்றுள்ள மாணவி!

இலங்கை : சீதையம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற ராமர் – சீதை திருக்கல்யாணம் !

ட்ரம்ப்பை கொலை செய்ய ஈரான் சதி திட்டம் – நெதன்யாகு குற்றச்சாட்டு!

பாஜக ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் முன்னேற்றமடைந்துள்ளது : நாராயணன் திருப்பதி!

Load More

அண்மைச் செய்திகள்

‘சூர்யா 45’ படத்தின் டைட்டில் அப்டேட் வெளியீடு!

ரூ.45 கோடி வசூல் செய்த மாமன் படம்!

‘எடுடா பாட்டல’ பாடல் இணையத்தில் டிரெண்டிங்!

ஆஸ்திரேலியாவில் கைது முயற்சியின் போது கழுத்து நெறிக்கப்பட்ட இந்தியர்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாரிசுதாரர்கள் 33 வருடங்களுக்குப் பிறகு சட்டப் போராட்டத்தில் வெற்றி!

பட்டீஸ்வரத்தில் திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் முத்துபந்தல் அளிக்கும் நிகழ்வு!

மீன்பிடி தடைக்காலம் நிறைவு : உற்சாகத்துடன் கடலுக்குள் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்!

ஆர்.எஸ்.எஸ், எச்.எஸ்.எஸ் இணைந்து நடத்திய இரத்ததான முகாம்!

கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில் நாடக ஆசிரியர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை!

மருத்துவச் செலவுக்காக மூதாட்டி சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த 80 ஆயிரம் ரூபாய் எரிந்து சாம்பல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies