ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா !
Sep 21, 2026, 07:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா !

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 9, 2023, 10:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் நேற்று நடந்த ஐந்தாவதுப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது.

ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று சென்னையில் நடைபெற்றப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணிப் பேட்டிங்யைத் தேர்வுச் செய்தது. இதன் படி ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரராக மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கின்னர்.

இதில் மிட்செல் மார்ஷ் மூன்றாவது ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார். அதனால் இவரை அடுத்து ஸ்மித் களமிறங்கினார். டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் கூட்டணி சிறப்பாக ரன்களை எடுத்து வந்த நிலையில் 17 வது ஓவரில் டேவிட் வார்னர் 41 ரன்களில் குலதீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக மார்னஸ் லாபுசாக்னே களமிறங்கினார். அடுத்த 10 ஓவர்கள் அவரை ஆட்டமிழக்காமல் ஆஸ்திரேலிய அணி விளையாடி வந்தது பிறகு 27 வது ஓவரில் ஸ்டீவன் ஸ்மித் 46 ரன்களுக்கு ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே மார்னஸ் லாபுசாக்னே ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அவர் ஆட்டமிழந்து போன அடுத்த 2 வது பந்திலேயே அலெக்ஸ் கேரி ரன் ஏதும் எடுக்காமல் ஜடேஜாவின் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்கள் விழா இறுதியாக ஆஸ்திரேலியா அணி 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களும், டேவிட் வார்னர் 41 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்களும், குலதீப் யாதவ் 2 விக்கெட்களும், அஸ்வின், சிராஜ், ஹர்திக் பாண்டிய ஆகியோர் தலா 1 விக்கெட்களும் எடுத்தனர்.

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.

முதல் ஓவரில் 4 வது பந்தில் இஷான் கிஷன் மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். பின்பு அடுத்த ஓவரில் ரோஹித் சர்மா ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க அடுத்த 2 வது பந்திலேயே ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 2/3 ஆகா இருந்தது.

அடுத்ததாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி 150 பார்ட்னெர்ஷிப் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு எடுத்து சென்றனர்.

பின்பு 38 வது ஓவரில் விராட் கோலி 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ஹர்திக் பாண்டிய 1 சிக்சர் அடித்து 11 ரன்களும் கே.எல்.ராகுல் 97 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமலும் இருந்தனர்.

கடைசியாக இந்திய அணி 41 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது 97 ரன்களை எடுத்த கே.எல். ராகுலுக்கு கிடைத்தது.

Tags: india vs Australiaworld cup 2023
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்ரேல் மீதான போர் !

Next Post

மேகாலயாவில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

Related News

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies