இந்தோனேசியாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
குபாங் என்ற இடத்தில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி உணரப்பட்டது. அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால், ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தோ, பொருட் சேதம் குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், குபாங்கில் உள்ள விடுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர்.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.