19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டி இந்திய அணியின் கேப்டன் உதய் சாஹரனின் பெற்றோர்கள் கோவிலுக்கு பிராத்தனை செய்தனர்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளது.
மொத்தமாக 16 அணிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியானது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரில் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டியில் இந்தியா கோப்பை வெல்லவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தாலும் சீனியர் உலகக்கோப்பை போட்டியை நினைத்து சற்று பயத்திலும் உள்ளனர் ரசிகர்கள்.
இந்நிலையில் இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக இந்திய அணியில் கேப்டன் உதய் சாஹரனின் பெற்றோர்கள் கோவிலுக்கு பிராத்தனை செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் கங்காநகரில் உள்ள ஸ்ரீ பாலாஜி கோவிலுக்கு உதய் சாஹரனின் பெற்றோர்கள் சென்று இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் பிராத்தனை செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதய் சாஹரனின் தந்தை, ” இந்திய அணிக்கு ஆசிர்வாதம் கிடைக்க நாங்கள் பாலாஜி கோவிலில் பிராத்தனை செய்கிறோம். இன்று இந்திய அணி எனது மகன் தலைமையில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் களமிறங்கவுள்ளது.
இதில் இந்திய அணி வெற்றி பெற பிராத்தனை செய்கிறோம் எனது மகன் தலைமையின் கீழ் இந்திய அணியை பார்ப்பதை விட வேற ஏதும் எங்களுக்கு பெருமை இல்லை” என கூறியுள்ளார்.