காங்கிரஸ் நாட்டை தனது சொத்தாகக் கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பக்சரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என்ற வகையில் நாட்டை இயக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இவ்வளவு பெரிய நாட்டை அவ்வாறு நடத்த முடியுமா என்று கேள்வி எழுப்பிய அவர் , காங்கிரஸ் கலாச்சாரத்தில் ஊழல் ஆழமாக வேரூன்றியுள்ளதாக கூறினார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெற போகிறது என ராகுல் கூறியதை கேட்டு அக்கட்சியினரே சிரிப்பதாகவும் அவர் கூறினார்.
ராமர் கோயில் கட்டியதன் மூலம் 500 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். ஆனால் அந்த ராமர் கோவில் விழாவை இண்டியா கூட்டணி தலைவர்கள் புறக்கணித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
















