காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு! : வெடித்த கோஷ்டி பூசல்!
Jun 28, 2026, 04:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு! : வெடித்த கோஷ்டி பூசல்!

Murugesan M by Murugesan M
Jun 12, 2024, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூச்சல், குழப்பத்தால், கட்சியின் உறுப்பினர்கள் அரங்கத்தை விட்டு வெளியேறினர். உறுப்பினர்கள் கொந்தளிக்கும் வகையில் தலைவர்கள் கூட்டத்தில் என்ன பேசினார்கள்? சலசலப்புக்கு யார் காரணம்? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவதாக கூறினாலும், பா.சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக செயல்பட்டு வருவது கடந்த கால சம்பவங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

அந்தவகையில், சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழுக் கூட்டத்தில், தலைவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், உறுப்பினர்கள் அதிருப்தியடைந்து கூட்டத்தில் வெளியேறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

மக்களவை தேர்தவில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாகவும், கட்சியின் அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்து விவாதிப்பது தொடர்பாகவும் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், மற்ற அணிகளின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த கூட்டம், இடையில் தலைவர்கள் பேச தொடங்கியதும் பூகம்பம் வெடித்தது.

முதலில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகையோ, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி எத்தனை ஆண்டுகள் தான் பிற கட்சிகளை சார்ந்து இருப்பது என்றும், எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்றும் தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

செல்வந்பெருந்தகையின் பேச்சிற்கு முரணாக உரையாற்றிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இருப்பதற்கு திமுகவும் , திமுக தலைவர் ஸ்டாலினும் தான் காரணம் என்றும், அதை மறக்க கூடாது என்றும் தெரிவித்தார். தனித்து நின்று டெபாசிட் கூட வாங்க முடியாமல் இருந்தோம் என அவர் பேசியதால் சர்ச்சை வெடித்தது.

முன்னாள், இந்நாள் தலைவர்களின் கருத்து மோதலால் கொந்தளித்த உறுப்பினர்கள், பொதுக்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பேசாமல் திமுகவிற்கு நன்றி கூறிக் கொண்டிருக்கிறீர்களே என கேள்வி எழுப்பியபடி அரங்கை விட்டு வெளியேறினர்.

இந்தப் பிரச்சனை ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை அணியின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மகாத்மா காந்திக்கு பெரியார் எழுதிய கடிதம் குறித்து பேசினார். அப்போது, கூட்டத்திலிருந்த ஒருவர் காந்தி அப்படியெல்லாம் கூறவில்லை என குரல் எழுப்பியபோது, தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக பீட்டர் அல்போன்ஸ் பதிலளித்தால் பரபரப்பு நிலவியது.

மேலும், பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு சாப்பாடு பரிமாறுவதிலும், உறுப்பினர்களிடையே மோதல் வெடித்ததுடன், உறுப்பினர்கள் உணவு வழங்க தாமதம் ஏற்பட்டதால், டேபிளை தள்ளிவிட்டு அங்கிருந்தும் கிளம்பினார்.

கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் தலைவர்களின் கருத்து வேறுபாட்டாலும், உறுப்பினர்களின் மனக்கசப்பாலும் முடிந்தது. மேலும், இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி-க்கள் கார்த்தி சிதம்பரம் மற்றும் மாணிக்கம் தாகூர் பங்கேற்காதது உறுப்பினர்கள் மத்தியில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மாநில கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் அவர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

Tags: Kong. Leaders talkvolunteers protest erupted party conflict!
ShareTweetSendShare
Previous Post

விவிஐபி பாதுகாப்பு : கருப்பு பூனைப்படை விடுவிப்பு?

Next Post

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி!

Related News

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies