தூத்துக்குடியில் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற சப்பரபவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பனிமய மாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு விழா 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் நாள் திருவிழாவை ஒட்டி நேற்றிரவு மாதாவின் சப்பர பவனி நடைபெற்றது. இதில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாதா எழுந்தருளினார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருப்பலி, மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.