சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!
Jun 22, 2026, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

Murugesan M by Murugesan M
Aug 14, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வீரத்துக்குப் பெயர் பெற்ற தமிழகத்தில்,  தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்து தன்னிகரற்ற  சுதந்திர அடையாளமாக  விளங்கும் மாவீரன் அழகு முத்துக்கோன் பற்றி பார்க்கலாம்.

ஆங்கில ஆட்சிக்கு எதிரான  முதல் சுதந்திர போராளி மாவீரன் அழகு முத்துக் கோன், 1710-ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் பிறந்தார். எட்டயபுரம் பாளையத்தில் படைத்தளபதியாக பணியாற்றினார்.

1750 -ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். அதே ஆண்டு தன்னுடைய 22 வயதில் அழகுமுத்துகோன் மன்னராக முடிசூடிக்கொண்டார்.  எட்டயபுரத்திலும் அதனைச் சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூலிக்க, ஆங்கிலேயத் தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் என்ற கான்சாகிப் வந்தனர்.

ஆங்கிலேயர்களுக்குக் கப்பம் கட்டக்கூடாது என்று முடிவெடுத்த அழகுமுத்துக்கோன், வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு வரி வசூலிக்க ஏது உரிமை ?  எனக் கேள்வி கேட்டு கான்சாகிப்புக்கு கடிதம் எழுதினார்.

கடும் கோபமடைந்த கான்சாகிப் தன் படையுடன், பீரங்கி படையையும் சேர்த்துக் கொண்டு எட்டயபுரத்தை முற்றுகையிட்டுத் தாக்கத் தொடங்கினான். மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கும் கான்சாகிப்புக்கும் பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது.

இறுதியில் மாவீரன் அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்களை  வெட்டிய பிரிட்டிஷ் படை, அவர்களைத் துடிதுடிக்கக் கொன்று குவித்தது. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயின் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில்  மாவீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள். பீரங்கிகள் வெடித்துச் சிதறின.

வெடித்துச் சிதறிய  மாவீரன் அழகுமுத்துக்கோன் உடல் துண்டுகள் ஒரு நார் பெட்டியில் வைத்து சோழாபுரம் கண்மாய் கரையில் எரியூட்டப்பட்டது. அந்த இடத்தில் ஒரு நடுகல் நடப்பட்டு, ஆண்டு தோறும் புகழஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

வீர மரணம் அடைந்தவர்களுக்கான நடுகல் நடப்பட்டு, ஆண்டு தோறும் கட்டாளங்குளம் மக்கள், புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு, பாரத பிரதமர் மோடி தலைமையிலான அரசு நினைவு தபால் தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

Tags: freedom fighter78th independance dayThe symbol of freedom is the beautiful pearl of the hero
ShareTweetSendShare
Previous Post

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Next Post

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies