டெலிகிராம் செயலியின் நிறுவனரும், ரஷ்யாவின் ஜுக்கர்பெர்க் என்று அழைக்கப்படும் 39 வயதான பாவெல் துரோவ், பிரான்ஸில் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாவெல் துரோவ் கைதுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. யார் இந்த பாவெல் துரோவ் ? அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் என்ன ? அவருக்கு ஆதரவாக நிற்பவர்கள் யார் யார் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சமூக வலைதளங்களில் WhatsApp, Instagram, TikTok மற்றும் WeChat போன்ற ஒரு செயலியாக டெலிகிராம் இருக்கிறது. தற்போது துபாயை மையமாக கொண்டு இயங்கி வரும் டெலிகிராம் செயலியை ரஷ்யாவை சேர்ந்த பாவல் துரோவ், தனது சகோதரர் நிகோலாய் உடன் சேர்ந்து 2013ம் ஆண்டு தொடங்கினார். டெலிகிராம் 900 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைப் பெற்றிருக்கிறது.
ஏற்கெனவே துரோவ் தனது VKontakte என்ற சமூக வலைத்தளமும் வைத்திருந்தார். ரஷ்ய அரசின் கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்ததால் 2014-ம் ஆண்டு ரஷ்யாவை விட்டு வெளியேறினார். பின்னர் VKontakte தளத்தை விற்றார்.
2018ம் ஆண்டில், டெலிகிராம் ரஷ்யாவில் தடை செய்யப்பட்டது. இருப்பினும், 2021 ஆம் ஆண்டு அந்த தடை நீக்கப்பட்டது. 2017ம் ஆண்டில் துபாயில் குடியேறிய துரோவ், 2021 ஆம் ஆண்டு பிரெஞ்சு குடியுரிமை பெற்றார். ரஷ்யா-உக்ரைன் போர் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்வதில் டெலிகிராம் செயலி ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது
மோசடி, போதைப்பொருள் கடத்தல், தீவிரவாதத்தை வாதத்தை ஊக்குவித்தல்,இணைய மிரட்டல், ஆபாசம் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் வகையில் பதிவுகள் வெளியிட உடந்தையாக போன்ற குற்றங்களுக்கு டெலிகிராம் செயலி உடந்தையாக உள்ளது என்ற புகார்கள் எழுந்தன.
டெலிகிராம் செயலி 2000 பேர்கள் வரை ஒரு குழுவில் இருக்க அனுமதி அளிக்கிறது. அதிக எண்ணிக்கையிலான குழுக்களை எளிதில் உருவாக்க அனுமதிக்கும் இந்த அம்சத்தின் காரணமாக டெலிகிராம் போதைக் கடத்தல் காரர்களுக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் தவறான தகவல்களைப் பரப்ப உதவுகிறது என்று குற்றஞ்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதன் அடிப்படையில் , இப்போது பிரெஞ்சு காவல் துறையினர் பாவல் துரோவ்வை கைது செய்துள்ளனர். பாவல் துரோவ்வை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில், துரோவ் கைது செய்யப்பட்ட பிறகு, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் #FreePavel என்ற ஹேஷ்டேக் பதிவிட்டிருக்கிறார்.
மேலும் ‘மீம்ஸ்’களை தடை செய்ய அயர்லாந்து முயற்சிப்பதாகவும் . எக்ஸ் நிறுவனத்தை பிரேசில் நாட்டை விட்டு வெளியேற்ற நினைப்பதாகவும், எக்ஸ் பதிவுகளை ஆஸ்திரேலியா தணிக்கை செய்ய முயற்சிப்பதாகவும் கூறியுள்ள எலான் மஸ்க் வரும் 2030ம் ஆண்டில் ஐரோப்பாவில் மீம்ஸ் போடுபவர்களைத் தூக்கிலிடும் சூழல் கூட உருவாகலாம் என்றும் குறிப்பிட்டு இது ஆபத்தான காலம் எனவும் பதிவிட்டிருக்கிறார்.
மேலும் அமெரிக்க அரசியல்வாதியான ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் தனது எக்ஸ் தளத்தில் துரோவ் கைது செய்யப்பட்டது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கிறது என்றும், சுதந்திரமான பேச்சுரிமையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்
இந்தியாவின் முன்னாள் NSA தொடர்பாளர் எட்வர்ட் ஸ்னோடென், பாவல் துரோவ் கைது, பேச்சு சுதந்திரம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் மீதான தாக்குதல் என்று கூறியுள்ளார்.
டெலிகிராம் செயலியை உலகம் முழுதும் 90 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள். அதிகமாக இந்தியாவில் தான் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.