சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை பிரதமர் மோடி சந்தித்து இரு நாட்டு நல்லுறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
புருனே பயணத்தைத் தொடர்ந்து சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பிரதமர் மோடியும், ட்ரம்ஸ் வாசித்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்த பிரதமர் மோடி, இரு நாட்டு நல்லுறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும், அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்தினம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து உரையாடும் பிரதமர் மோடி, சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர்களையும் சந்திக்கிறார்.