நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நடமாடும் காட்டு யானைகளை, ட்ரோன் மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கேரள வனப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த இந்த யானைகள், நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகேயுள்ள எலியாஸ் கடை, சேரம்பாடி ஆகிய பகுதிகளில் நடமாடி வருகின்றன.
யானைகளின் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர், அவைகள் கிராமங்களுக்குள் செல்வதை தடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
யானைகள் கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் உலா வருவதால் பொதுமக்கள் தேவையின்றி வனப் பகுதிக்குள் செல்வதைத் தவிர்க்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.