மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இரண்டு கிளர்ச்சி குழுக்களுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
திரிபுரா மாநிலத்தில் அமைதியை கொண்டு வருவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தன.
இந்நிலையில், புது டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இரண்டு கிளர்ச்சி குழுக்களுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில், மத்திய அரசு, திரிபுரா அரசு ஆகியவற்றுடன் திரிபுரா தேசிய விடுதலை முன்னணி மற்றும் அனைத்து திரிபுரா டைகர் ஃபோர்ஸ் ஆகிய குழுக்களும் இணைந்து கையெழுத்திட்டன. ஒப்பந்தம் கையெழுத்தானபோது, திரிபுரா மாநில முதலமைச்சர் மாணிக் சாஹா மற்றும் மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.