ஆசிரியர் தினத்தையொட்டி, ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நெற்றியில் பொட்டு வைத்தும், கையில் ரோஜா பூ கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.
பின்னர், ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர். இந்நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.